Loading...
 

தூதராக ஆவது

 

தூதராக வேண்டுமா?

நிச்சயமாகவா? smiley  அவ்வாறு ஆவதற்கு முன்பு, நீங்கள் முதலில் தூதரின் பாத்திரத்தைப் பற்றி தயவுசெய்து படிக்கவும் ... அதைப் பற்றிப் படித்த பிறகும், நீங்கள் தூதராக ஆக வேண்டுமென்று விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள், இதோ இங்கே:

தூதராக ஆவதற்கு நீங்கள்:

  • உங்கள் நாட்டில் Agora-வை பிரபலமாக்க உறுதியளிக்க வேண்டும் -எங்கள் இலட்சியங்கள், சமூகம், அடிப்படைக் கொள்கைகள் மற்றும் கல்வித் திட்டம் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் Agora கிளப்புகளை அமைத்திடவும், அதன் வாயிலாக சமூகத்தை மேம்படுத்திடவும் உதவிட வேண்டும்.
  • உங்கள் நாட்டில் ஒரு புதிய Agora கிளப்பை சாசனம் செய்து நிலைப்படுத்திட வேண்டும். ஒரு நிலையான கிளப்பினால், சந்திப்புகளில் உங்கள் பங்கேற்பு இல்லாமல் அல்லது தொடர்ந்து மக்கள் முன்னிலையில் நீங்கள் இருந்திட தேவையில்லாமல், சந்திப்புகளை நடத்தி, Agora கல்வித் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.
  • Agora மற்றும் உங்கள் கிளப்பை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக விளம்பரப்படுத்தத் தொடங்கிட வேண்டும் - உங்கள் சொந்த பதிவுகள் அல்லது கிளப் சந்திப்புகள் அல்லது படங்கள் (உங்கள் கிளப்புகள் அல்லது மற்ற கிளப்பினுடையது) ஆகியவற்றை இடுகையிடுவதன் மூலம் அல்லது எங்கள் அதிகாரப்பூர்வமான இடுகைகளைப் பகிர்வதன் மூலம் விளம்பரப்படுத்தலாம்.
  • நீங்கள் குறைந்தபட்சம் சில மாதங்களுக்கு கிளப்பின் தலைவராக இருந்து, அதை ஒரு முன்னோடி கிளப்பாக. மாற்றிட வேண்டும். (முன்னோடி கிளப் என்பது அடிப்படையில் Agora வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைப்பிடிக்கும் ஒரு கிளப்பாகும், மேலும் இது அந்த நாட்டில் சொந்தமாக கிளப் தொடங்க விரும்பும் மற்ற நபர்களின் மாதிரியாக அல்லது முன்னோடியாக திகழும் கிளப்பாகும்).
  • இறுதியாக, Agora, அதன் அமைப்பு மற்றும் கல்வி ரீதியான அணுகுமுறை, பல்வேறு வகையான விதிகள், மற்றும் நிச்சயமாக, Agora தூதராக இருப்பதன் மூலமாக ஏற்படும் தாக்கங்கள், குறிப்பாக ஃபவுண்டேஷனுக்கு நீங்கள் செலவிடும் நேரம் மற்றும் ஆற்றல் அர்ப்பணிப்பு பற்றிய முழு அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் தூதர் பாத்திரம் வகிப்பதற்கு தயாராக இருப்பதாக நினைத்தால், மேலே உள்ள தேவைகளை பூர்த்தி செய்தவுடன், info at agoraspeakers.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எங்களுக்கு எழுதி அனுப்பவும்.

தூதர் என்ற பாத்திரத்தை தேவைக்கேற்ப பலருக்கும் பகிரலாம், மேலும் இது ஃபவுண்டேஷன் வாரியத்தால் நியமிக்கப்படும் ஒரு தன்னார்வப் பாத்திரமாகும். குறிப்பாக பெரிய நாடுகளுக்கு, பல்வேறு பகுதிகளில் பல தூதர்கள் இருக்கலாம்.

இந்தப் பாத்திரத்தின் பதவிக்காலமானது அமைப்பானது நாட்டில் பிரபலமாகி, போதுமான அளவு கிளப்புகள் இருக்கும் வரையாகும், அப்போதுதான் நிலையான தலைமைப் பதவிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். இது பொதுவாக 10 கிளப்புகள் மற்றும் குறைந்தது 300 உறுப்பினர்கள் இருக்கும்போது சாத்தியமாகும்.

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:00:17 CET by agora.